தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.!  - Seithipunal
Seithipunal


தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இன்று முதல் 18.04.2024 வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். 

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்ட பகுதிகளில் 4 சென்டிமீட்டர் மழையும், திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்காக எச்சரிக்கை:



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu weather report 14042024


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->