கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
TamilNadu today holiday for 7 districts due to heavy rain
தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வடமேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்தது இருந்தது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதனால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
TamilNadu today holiday for 7 districts due to heavy rain