தமிழகம்: போதைப்பொருள் வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் – தேதிகள் அறிவிப்பு!
tamilnadu police Vehicles seized sold at public auction
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் படகுகள் உள்ளிட்ட மொத்தம் 72 வாகனங்கள், வரும் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
ஏலம் விவரங்கள்
டிசம்பர் 22 - காலை 11:00 மணி - மதுரை - 48 வாகனங்கள்
டிசம்பர் 23 - காலை 11:00 மணி - திருச்சி - 24 வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்: இந்த ஏலத்தில் 30 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் ஆகியவை விற்பனைக்கு வரவுள்ளன.
ஏல விதிமுறைகள்
பார்வையிடல்: ஏலம் எடுக்க விரும்புவோர் டிசம்பர் 7, 2025 முதல் டிசம்பர் 21, 2025 வரை திருச்சி, மதுரை, கோவை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 10 போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு அலுவலகங்களில் வாகனங்களை நேரடியாகப் பார்வையிடலாம்.
நுழைவுக் கட்டணம்: ஏலத்தில் பங்கேற்பவர்கள் நுழைவுக் கட்டணமாக ரூபாய் 1,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பணம் செலுத்துதல்: ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாகச் செலுத்திவிட்டு, இரண்டு நாட்களுக்குள் அதற்கான ஜி.எஸ்.டி. தொகையைத் தங்கள் ஜி.எஸ்.டி. கணக்கில் செலுத்தி, அதன் நகலைக் காவல்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னரே வாகனத்தின் விற்பனை ஆணை வழங்கப்படும்.
English Summary
tamilnadu police Vehicles seized sold at public auction