'இந்திய கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது'; ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் பதிவு..!
Trump posts on the social media platform Truth that the drone attack carried out by Iran on Indian ships is completely unacceptable
அண்மையில் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் அதிகம் நிறைந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு இதில் ஒரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த நிலையில் இந்திய கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதற்கு முரணாக கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
''ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து சென்ற இந்திய கப்பல்கள் மீது அவர்கள் (ஈரான்) மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பாலாவ்கொடி பொருத்தப்பட்ட 'செட்டெபெல்லோ' என்ற எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஈரான் துறைமுகத்துக்கு நுழைய முயன்றது. இதில் இருந்த 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள் ஆவர். இந்த கப்பலுக்கு பிறப்பித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்க முயன்றதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து இந்த கப்பலின் இன்ஜின் அறை மீது அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி முடக்கியது. இதில் இந்திய மாலுமிகள் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா, தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், ''செட்டோபெல்லோ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமிகள் 03 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது.

இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு மோடி அரசு துணை நிற்கிறது. மீட்கப்பட்ட இந்திய மாலுமிகள் உடனடியாக நாடு திரும்புவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த மாலுமிகளின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக இந்தியா கொண்டு வரப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மிகுந்த கவலையளிப்பதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் போர் பதற்றம் உடனடியாக குறைய வேண்டும் எனவும், வலியுறுத்தியுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து, இந்திய மாலுமிகள் மீதான தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் ஈரான் மேற்கொள்ள உள்ள ஒப்பந்தம் தொடர்பான வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே இறுதி செய்யப்பட உள்ள தற்போதைய ஒப்பந்தத்தின் வரைவில், ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக எந்த ஓர் உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஈரானின் அடிப்படைக் கொள்கைளுக்கு உட்பட்டே அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான ஈரானின் உரிமை மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தக்க வைத்துக்கொள்வது போன்ற விஷயங்கள் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் நோக்கில் வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Trump posts on the social media platform Truth that the drone attack carried out by Iran on Indian ships is completely unacceptable