'நீங்க வேண்டாம்னா வரமாட்டேன்'...! விஜய் பாணியில் ராகவா லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு...! இறுதியாக சம்மதம் சொன்ன தாயார்! - அரசியல் களம் புகுகிறாரா லாரன்ஸ்...?
I wont come if you dont want me Raghava Lawrence dramatic decision Vijay style Finally his mother agreed Is Lawrence entering political arena
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் களமிறங்க உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வந்தன. இதனால் அவரது அரசியல் பயணம் குறித்த எதிர்பார்ப்பும், ஊகங்களும் அரசியல் வட்டாரங்களில் வேகமெடுத்தன.
இந்த சூழலில், "தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து விரைவில் முக்கிய விளக்கத்தை வெளியிடுகிறேன்" என்று ராகவா லாரன்ஸ் முன்பே தெரிவித்திருந்தார். முதலில் தனது முடிவை ஜூன் 11-ஆம் தேதி காலை அறிவிக்க திட்டமிட்டிருந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவையொட்டி அறிவிப்பை ஒத்திவைத்தார்.

இதையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி மூலம், அரசியலுக்கு வருவது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை நேரடியாக கேட்டறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.அவரது பதிவில், "இந்த காணொளியை பார்த்த பிறகு உங்கள் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வேண்டாம் என்று கூறினால் அரசியலுக்கு வரமாட்டேன். தொடர்ந்து சமூக சேவையிலேயே ஈடுபடுவேன். நீங்கள் ஆதரவு தெரிவித்தால் அரசியல் பயணத்திற்கு தயாராக இருக்கிறேன். எப்போது, யாருடன் இந்தப் பயணத்தை தொடங்கப் போகிறேன் என்பதை பின்னர் அறிவிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.காணொளியில் தனது அரசியல் எண்ணங்கள் உருவான பின்னணியையும் ராகவா லாரன்ஸ் பகிர்ந்துள்ளார்.
அதில், "கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே" என்ற வாழ்க்கைக் கொள்கையை பின்பற்றி வருவதாக கூறிய அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த காலகட்டத்தில் தானும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது தாயார் அரசியலில் ஈடுபடுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அரசியல் என்பது மிகவும் சிக்கலான களம் என்பதால் அதில் நுழைய வேண்டாம் என்று பலமுறை அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.அதன்பிறகு நடிகர் விஜய் அரசியல் பயணத்தை தொடங்கியபோதும், அதே விருப்பம் மீண்டும் எழுந்ததாகவும், அப்போதும் தனது தாயாரிடம் ஆலோசனை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்ற பதிலையே அவர் மீண்டும் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் மற்றும் விஜயின் தேர்தல் வெற்றி சூழ்நிலைகளை மாற்றியதாகவும், அதன் பின்னர் மீண்டும் தாயாரிடம் அனுமதி கேட்டபோது, அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
"இப்போது என் தாயாரைப் போலவே நான் மதிக்கும் ரசிகர்களிடமும், மக்களிடமும் கேட்கிறேன். அரசியலுக்கு வருவதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? நீங்கள் வேண்டாம் என்றால் வரமாட்டேன். வரலாம் என்றால் உங்கள் ஆதரவோடு அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அவரது பேச்சில் நடிகர் விஜய் குறித்து இடம்பெற்ற குறிப்புகள் காரணமாக, எதிர்காலத்தில் இருவரும் ஒரே அரசியல் தளத்தில் இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
English Summary
I wont come if you dont want me Raghava Lawrence dramatic decision Vijay style Finally his mother agreed Is Lawrence entering political arena