பாலியல் சீண்டல் விவகாரம்: தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்...! - தவெக தலைமை அதிரடி ஆக்ஷன்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் சர்ச்சையில் சிக்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி கழக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை பரங்கிமலை பகுதியில் வசித்து வரும், கணவரை இழந்த பெண் ஒருவரிடம் ஆலந்தூர் வடக்கு பகுதி த.வெ.க. செயலாளராக பொறுப்பு வகித்து வந்த வேம்புலி என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ புகார் அளித்ததைத் தொடர்ந்து, பரங்கிமலை காவலர்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் ஒழுங்கு நெறிமுறைகளுக்கும் கொள்கை மரபுகளுக்கும் முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதுடன், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி வேம்புலி மீது கட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை புறநகர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலந்தூர் வடக்கு பகுதி கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த வேம்புலி, கட்சியின் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், கழகத்தின் கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில், அவர் வகித்து வந்த பகுதி செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதி உட்பட அனைத்திலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.இனிமேல் அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும், கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கழகத்தின் பெயர், கொடி, சின்னம், பதவி அல்லது அமைப்பு அடையாளங்களை பயன்படுத்தி எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட அவருக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரால் இனி மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயலுக்கும் கழகம் பொறுப்பேற்காது என்றும், கட்சியினர் யாரும் அவருடன் அமைப்பு ரீதியான தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை குற்றச்சாட்டைத் தொடர்ந்து கட்சி நிர்வாகி மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Harassment Issue Tamil Nadu Victory League executive removed from party tvk Chief Action Action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->