தடுப்பூசி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.! - Seithipunal
Seithipunal


தடுப்பூசி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்றும், 6.5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், “கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதற்காக இதுவரை பல்வேறு காலக்கட்டங்களில் 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 

இந்த முகாம்களில் 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 11.93 கோடி தடுப்பூசிகளை, தமிழக அரசிற்கு வழங்கியுள்ளது.

தமிழகத்தில், தற்போது வரை 21 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 86 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும், 4.42 கோடி பேர் ஊக்கத் தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். 

இருப்பினும், தமிழகத்தில் தற்போது எந்தத் தடுப்பூசியும் இருப்பு இல்லை. ஆகவே தமிழ்நாட்டிற்கு 5 லட்சம் கோவிஷீல்ட், ஐம்பது ஆயிரம் கோவாக்சின், 75 ஆயிரம் கோர்பி வேக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government write letter to central govt for vaccine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->