தமிழகத்தில் 18 வயது இளைஞன் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் கொரோனா வைரசால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் தற்போது மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் தேசிய சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. அதில் 18 வயது இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொட்டு ஏற்பட்டு அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துபாயில் இருந்து திரும்பிய 63 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாய்லாந்து நாட்டினருடன் பழகி 66 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். தற்போது தமிழகத்தில் மட்டும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu corona patient increased to 26


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal