டெஸ்லா, பி.எம்.டபிள்யூ, பென்ஸ் உட்பட 11 நிறுவனத்திற்கு கடிதம்.. தமிழக முதல்வர் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


மோட்டார் வாகனத்துறையில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனத்திற்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோட்டார் வாகனத்துறையில் முன்னணியில் இருக்கும் 11 நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்த கடிதத்தில், 11 மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய செயலாளர்களுக்கு, தமிழகத்தில் முதலீடு துவங்க கூறி தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் முதலீடு செய்ய டெஸ்லா, பி.எம்.டபிள்யூ, ஆடி மற்றும் ஹோண்டா, பென்ஸ், டொயோட்டா, சகோடா, வோக்ஸ், மெர்சகஸ் பென்ஸ் உட்பட 11 நிறுவனத்தின் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் தொழில் துவங்க கூறி கடிதம் எழுதியுள்ளார். 

முன்னதாக ஏற்கனவே உலகளவில் முன்னணி விமான உற்பத்தில் சிறந்து விளங்கும் ஏர்பஸ், போயிங் நிறுவன தலைவர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். இதனைப்போன்று தற்போது மோட்டார் வாகன உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனத்திற்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

மேலும், தமிழகத்தில் தொழில் துவங்க கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சாதமான சூழ்நிலைகளையும் பட்டியலிட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கும் பட்சத்தில், வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy wrote letter to Benz, Audi, BMW company


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal