மனக்குழப்பத்தில் மனம்போல உளறல் - தமிழக முதல்வர் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மனக்குழப்பத்தில் இருந்து வருகிறார். அதனால் மக்களிடம் எதையாவது உளறிக்கொண்டு இருக்கிறார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக, மீண்டும் மக்களுக்கான ஆட்சியை வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் மற்றும் நெசவாளிகளுடன் கலந்துரையாடினர். இது தொடர்பான உரையில், " விவசாயிகள் பண்பாளர்கள். தன்னலம் அற்று பணியாற்றி வருபவர்கள். மக்களுக்கு சோறு போடும் தெய்வங்கள். இத்தகைய பெருமையை கொண்ட விவசாயிகளை ரௌடியுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒப்பிட்டு பேசி வருகிறார். 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மனக்குழப்பத்தில் இருந்து வருகிறார். நான் கட்சியை பார்த்து பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை. வறுமையை பார்த்து கடன் தள்ளுபடி செய்துள்ளேன். கடன் பெற்றவர்கள் அனைவரும் அதிமுகவினர் என கூறுகிறார். ஏன் திமுகவினர் விவசாயிகளாக இல்லையா?. மனக்குழப்பத்தில் மக்களிடம் எதையாகவாது உளறிக்கொண்டு இருந்து வருகிறார் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Review DMK MK Stalin 7 Feb 2021


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal