#Breaking: தமிழக - கேரள நதிகள் இணைப்பு?.. தமிழக முதல்வர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " குமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பலரும் சென்று வருகின்றனர். திருவனந்தபுரத்தில் ஏற்கனவே கொரோனா பரவல் அதிகளவில் உள்ளதாக தகவல் வெளியானது. 

இதனால் திருவனந்தபுரத்தில் இருந்து குமரிக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

இந்திய சுதந்திர போராட்ட வீரர் சதாவ் அதானிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, நாகர்கோவில் நகராட்சி 18 ஆவது வார்டு தெருவுக்கு சதாவ் அதானியின் பெயர் சூட்டப்படும். பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளில் நல்ல நிலையில் உள்ள படகுகள் தமிழகத்திற்கு வந்துவிட்டது. பாழடைந்துள்ள படகுகளை மட்டுமே அழிக்க அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். 7.5 விழுக்காடு ஒதுக்கீடு என்பது அரசின் சட்டத்திற்கு உட்பட்டது. 

கேரள அரசுடன் நதிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வனப்பாதுகாப்பு சட்டம் அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. சென்னை மதுரவாயல் மேம்பால சாலை பணிகள் விரைவில் துவங்கும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet Nagarcoil 10 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->