மகிழ்ச்சியில் தமிழக அரசு: தனி நபர் வருமானத்தில் 02-வது இடம்: மத்திய அரசின் புள்ளிவிபரங்கள்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தனி நபர் வருமானத்தில் 02-வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. தமிழகத்தில் தனி நபர் வருமானம் 1.96,309 ரூபாய் ஆக உள்ளது என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய அரசு லோக்சபாவில் அளித்த புள்ளி விபரங்கள்:

கடந்த 2014 -15-இல் தேசிய அளவில் தனி நபர் வருமானம் ரூ.72,805 ஆக இருந்தது. இது 2024- 25-ஆம் நிதியாண்டில் ரூ.1,14,710 ஆக உயர்ந்துள்ளது.( 57.5 சதவீதம் அதிகம்)

அதேநேரத்தில் தேசிய அளவில் இந்த வளர்ச்சி சரிசமாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

01- கர்நாடக மாநிலம்: அங்கு தனி நபர் வருமானம் ரூ.2, 05,605 ஆக உள்ளது.

02- தமிழகத்தில் தனி நபர் வருமானம் ரூ. 1,96,309 ஆக உள்ளது.

அதன்படி, ஒடிசா, கர்நாடகா, தமிழகம், தெலுங்கானாவில் தனி நபர் வளர்ச்சி விகிதம் இரு மடங்காக அதிகரித்த நிலையில், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குறைவானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தனி நபர் வருமானத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது தொடர்பில் தமிழக அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்தபடி திமுக அரசு 2024-2025-ஆம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இது.

நேற்று( ஜூலை 21) லோக்சபாவில் மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதிலில் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1.14.710 ஆக உள்ளது.

தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழகம் ரூ.1.96,309/-பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என அறிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு முதல் தமிழகம் தொடர்ந்து அடைந்துவரும் வளர்ச்சிகள் சாதனைகள் ஆகியவற்றை எவராலும் மறைத்திட முடியாது. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu ranks 2nd in per capita income


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->