#BREAKING:| மத்திய அரசின் புதிய கொள்கையால் அரசு பேருந்துகள் நிறுத்தம் - கால அவகாசம் கோரி தமிழக அரசு வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் ஸ்கராப்பிங் கொள்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு மத்திய போக்குவரத்து அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

மத்திய அரசு 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அரசு வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்த வேண்டும் என அறிவித்திருந்தது இந்த சட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு மத்திய போக்குவரத்து அமைச்சகத்திடம்  ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் அளிக்க கோரி கோரிக்கை வைத்திருக்கிறது.

தமிழக போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை என்பதால் இவற்றை உடனடியாக நிறுத்தும் போது மிகப்பெரிய போக்குவரத்து சிக்கல் ஏற்படும் இதனைத் தவிர்ப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என மத்திய  போக்குவரத்து அமைச்சகத்திடம் ஒன்றரை ஆண்டு காலம் அவகாசம் கேட்டிருக்கிறது தமிழக அரசு.

உடனடியாக மாநில போக்குவரத்தில் 1500 பேருந்துகள் நிறுத்தப்பட்டால் அது மிகப்பெரிய சிக்கலையும் நெருக்கடியும் கொண்டு வந்து விடும் எனவே இதனை கருத்தில் கொண்டு ஒன்றரை ஆண்டுகள் அவகாசம்  நீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என  தமிழக அரசு கோரிக்கை வைத்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu govt insists on suspension of government buses due to central government new policy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->