தமிழக டி.ஜி.பி. நியமன விவகாரம் – விரைந்து பரிசீலிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Tamil Nadu DGP Appointment Issue Should be considered urgently Supreme Court orders
மதுரையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் வெரன்றி திபேன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் டி.ஜி.பி. நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் 2018 உத்தரவு பின்பற்றப்படவில்லை எனக் கூறப்பட்டது.
பிரகாஷ் சிங் வழக்கில், யு.பி.எஸ்.சி.க்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே டி.ஜி.பி. பரிந்துரை பட்டியல் அனுப்ப வேண்டும், மேலும் யாரையும் தற்காலிக டி.ஜி.பி.யாக நியமிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் முன்பு தெளிவுபடுத்தியிருந்தது.
ஆனால், முன்னாள் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசு வெங்கடராமனை தற்காலிக டி.ஜி.பி.யாக நியமித்தது. இதனை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு விரோதமாக உள்ளது என மனுதாரர் வாதிட்டார்.
இதுகுறித்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, “தமிழகத்தில் ஏன் தற்காலிக டி.ஜி.பி. நியமிக்க வேண்டும்?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி விளக்கமளித்தபோது, டி.ஜி.பி. பரிந்துரை பட்டியலில் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கு, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தாலும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டாலும் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசு அனுப்பிய டி.ஜி.பி. பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி. விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும், யு.பி.எஸ்.சி. பரிந்துரையின் அடிப்படையில் நிரந்தர டி.ஜி.பி.யை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனையடுத்து, தலைமைச் செயலாளருக்கு எதிரான அவமதிப்பு மனுவையும் நீதிமன்றம் முடித்துவைத்தது. தமிழகத்தில் நிரந்தர டி.ஜி.பி. நியமனம் எப்போது நடைபெறும் என்பதுதான் அடுத்த கட்ட கவனமாக உள்ளது.
English Summary
Tamil Nadu DGP Appointment Issue Should be considered urgently Supreme Court orders