தமிழ்நாடு முழுவதும் ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் இன்று உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஸ்விக்கி ஊழியர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் பகுதிகளில் இருக்கக்கூடிய ஸ்விக்கி ஊழியர்கள் 10,000 பேர் வரை இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

குறிப்பாக கொரோனா மற்றும் கொரோனாவுக்கு பிறகு ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. ஸ்விக்கி ஊழியர்கள் முன்வைக்கக்கூடிய முக்கியமான கோரிக்கைகளாக புதிய ஸ்லாட்டு முறை திரும்ப பெற வேண்டும், ஏற்கனவே வழங்கி வந்த டர்ன் ஓவர் தொகை மீண்டும் வழங்க வேண்டும், ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும்.

ஆடர் எடுக்கும் பொழுது ஒரு ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் 8000க்கும் மேற்பட்ட ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழக முழுவதும் ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் வேலை பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Swiggy employees strike across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->