பொன் மாணிக்கவேலிடம் சி.பி.ஐ விசாரிக்க தடையில்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண முராரி, ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் பொன் மாணிக்கவேல் தரப்பு வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.  

இருப்பினும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பின் கருத்துக்களை அறிய இருந்ததாக நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொன் மாணிக்கவேலின் மேல்முறையீட்டு மனு மீது மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசு, சிபிஐ மற்றும் எதிர்மனுதாரர் காதர் பாஷாவுக்கும் உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை நடத்ததடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக சிலை கடத்தல் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என தெரிய வருகிறது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court orders no ban on CBI investigation against Pon Manikavel


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->