மூன்று எம்.எல்.ஏ தகுதி நீக்கம் விவகாரம்.!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


அதிமுக கட்சிக்கும் அரசுக்கும் விரோதமாக செயல்பட்டதாக கூறி டிடிவி. தினகரன் ஆதரவாளர்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய எம்எல்ஏக்கள் மீது, அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார், இந்த புகார் மீது 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் 3 எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கைக்கு தடைகோரி, அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரபு, ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

3எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவுயிட்டது 

இதையடுத்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என மனு அளிக்க வந்தார் சட்டப்பேரவையில் சபாநாயர் இல்லாததால் பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனிடம்  மனு அளித்து விட்டு சென்றார். அதன் பின்னர் வழக்கு நிலுவையில் இருப்பதால் விளக்கம் அளிக்க தேவையில்லை என  சபாநாயகர் தரப்பில் இருந்து எம்ல்ஏ  பிரபுவுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவுயிட்டது

ஏற்கனவே ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு சபாநயகர் அனுப்பிய நோட்டீஸுக்கும் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது உத்தரையிட்டுயிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court judgement to disqualified mla


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->