திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்குகள் ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


தனக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, அவர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த உள்ளரங்க கூட்டம்  ஒன்றில், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக பேசியதாக கூறி, ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு,  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

சென்னையில் எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாகவும், இந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகிறதா, இல்லையா என்பதை, காவல்துறை சேகரித்த ஆதாரங்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றம் தான் எனக் கூறி, வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இதனையடுத்து ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த நிலையில்  எஸ்சி எஸ்டி பிரிவினரை அவமதித்ததாக கூறி அவர் மீது தொடரப்பட்ட  வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court dismiss all SC ST case against DMK MP RS Bharathi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->