லிப்ட் அறுந்து விழுந்ததில் இறந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்...! நடந்தது என்ன?
Supermarket employee dies after elevator collapses What happened
கோவை மாவட்டத்தில் ஒப்பணக்கார வீதியில் 'முகமது தவ்பிக்' -க்கு சொந்தமான 'சூப்பர் மார்க்கெட்' இருக்கிறது. அங்கு ஊழியராக வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் இன்று காலை 10 மணிக்கு கடை திறந்ததும், மளிகை பொருட்களை லிப்ட் மூலம் எடுத்துச் சென்றுள்ளார்.

இது பொருட்களை எடுத்து செல்லும் லிப்ட் என்பதால், அங்கு ஆட்கள் யாரும் பயணம் செய்ய அனுமதி இல்லை. இதனிடையே,பொருட்களை அனுப்ப சென்ற சுரேஷ், நீண்ட நேரம் கடந்தும் திரும்பி வராததால் அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள் அவரை தேடிச் சென்றனர்.
அப்போது தலையில் பலத்த காயத்துடன் சுரேஷ் இறந்து கிடந்தார். இதைக் கண்ட அவர்கள் அதிர்ந்து போனார்கள்.அங்கு பொருட்கள் எடுத்துச் செல்லும் லிப்ட்டு அறுந்து கிடந்தது. ஆகையால் லிப்ட் விழுந்து சுரேஷ் உயிரிழந்ததாக கணிக்கப்படுகிறது.
இதுகுறித்து காவலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், லிப்ட் நிறுவன ஊழியர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Supermarket employee dies after elevator collapses What happened