ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்தில் கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகின்றன.

ராமேஸ்வரத்தில் இன்று கடல் நீர் திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் உள்ள பவளப் பாறைகள் வெளியே தெரிகின்றன. இதேபோன்று சாமி சிலை களும் தெரிகின்றன.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. அக்னி தீர்த்த கடற்கரையில் கடலுக்கு உள்ளே இருந்த பழைய சாமி சிலைகள் மற்றும் பவள பாறைகள் வெளியே தெரிகின்றன.

காற்றின் வேகம் அதிகரித்து, கடல் சீற்றம், கடல் நீர் உள் வாங்கியது, கடல் கொந்தளிப்பு ஆகியவற்றை முன்னிட்டு அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு என்று முன்னெச்சரிக்கையாக மீன்பிடிக்க செல்லவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden intrusion of sea in Rameswaram


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->