தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்...! 3 பேரை இடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு...!
Sudden change IAS officers Tamil Nadu Government orders action by transferring 3 people
தமிழ்நாடு அரசின் நிர்வாகப் பணிகளில் மாற்றம் மேற்கொள்ளும் வகையில், 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வெவ்வேறு பொறுப்புகளுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் ஓராண்டு காலத்துக்கு தற்காலிகமாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பேரூராட்சிகள் இயக்குநர் பதவிக்கு கே.பி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வந்த கே.பி. கார்த்திகேயன், தற்போது அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.பேரூராட்சிகள் இயக்குநராக இதுவரை பணியாற்றி வந்த பிரியங்கா, தற்போது மின்னணு ஆளுமை முகமையின் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மின்னணு ஆளுமை முகமையின் முதன்மைச் செயல் அதிகாரி பொறுப்பையும் கூடுதல் பொறுப்பாக அவர் கவனிப்பார் என்று அரசு அறிவித்துள்ளது.வெளிநாட்டு அயல் பணியை நிறைவு செய்துவிட்டு மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்பியுள்ள பி. விஷ்ணு சந்திரன், தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் கே.பி. கார்த்திகேயனுக்குப் பதிலாக எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பொறுப்பை பி. விஷ்ணு சந்திரன் ஏற்க உள்ளார்.பி. விஷ்ணு சந்திரனுக்கான அயல் பணி தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாகப் பின்பற்றப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பேரூராட்சிகள் இயக்குநர் பதவியானது சமூக நலத்துறை இயக்குநர் பதவிக்கு இணையான தகுதியைக் கொண்டதாக இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Sudden change IAS officers Tamil Nadu Government orders action by transferring 3 people