திடீரென மயங்கிய பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்.! திருச்சியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் போதைப்பொருள் தடுப்பு உறுதி மொழியை ஏற்பு நிகழ்ச்சியில் வெயில் தாங்காமல் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மயங்கி விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமீபகாலமாகவே போதைப்பொருட்களின் பழக்கம் நாட்டில் அதிகரித்து விட்டது. இதற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர் கூட்டம் அதிகரித்து இருப்பது வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 இத்தகைய சூழலில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர்களுக்கு அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் தடுப்புக்கு ஒத்துழைக்கும் வகையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 10,000 மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்பு விழாவில் கலந்துகொண்டனர். அப்பொழுது அவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்தனர். வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் சில மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வெயிலின் தாக்கம் தாங்காமல் மயங்கி விழுந்தனர். 

இதனைத்தொடர்ந்து ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி கொடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students and teachers goes Unconscious in Trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->