கோவை ‘விழா’ நடத்த திட்டமிட்டுள்ள திமுக - Seithipunal
Seithipunal


18வது மக்களவை தேர்தலில் 40/40 இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியைக் கொண்டாடும் வகையில் கோவையில் வருகின்ற  ஜூன் 14-ஆம் தேதி ''முப்பெரும் விழா'' நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானம் அக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வரும் 18வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அணைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை கோவையில் ‘முப்பெரும் விழா’ நடத்துவதும் ஆகிய 6 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர் சிலைகளை இடமாற்றம் செய்யக் கூடாது என்றும், முன்பு இருந்த இடங்களில் சிலைகளை வைக்கக் கூடாது என்றும் கூட்டத்தில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

ஸ்டாலின் இக்கூட்டத்தின் போது பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்று ​​புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு அந்தந்த தொகுதிகளில் ஒரு எம்.பி அலுவலகம் அமைக்கவும், பொதுமக்கள் எளிதில் அவர்களைச் சென்றடைய வசதி செய்யவும் வலியுறுத்தினார். இதுமட்டுமில்லாமல், அவர்களது அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் பொதுமக்களுடன் சந்திப்பு நேரம் குறித்த விவரங்களை அந்தந்த அலுவலகங்களில் அட்டவணையை போடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

புதிய எம்.பி.க்களின் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், பொதுமக்களின் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin plans to celebrate mupperum vizha


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->