தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், செங்கல்பட்டு மாவட்டம் வடபுறந்த வாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin house bomb Threat unknown person arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->