தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!!
srilangan pirates attack tamilnadu fishermans in mid sea
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தங்கள் எல்லைக்கு வந்து மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்தும் வருகின்றனர். இதனைத் தடுக்குமாறு மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தியும் கடிதங்கள் எழுதி வருகிறது.
இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். நாகப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஒரே நாளில் மூன்று இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ள பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்டு உள்ளதாகவும், 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
srilangan pirates attack tamilnadu fishermans in mid sea