தொடரும் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 47 பேர் கைது.!!
sri langa navy arrest 47 tamilnadu fishermans
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அதாவது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும், நேற்று 30 பேரையும் கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

இந்தச் சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
sri langa navy arrest 47 tamilnadu fishermans