ஓணம் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னையிலிருந்து பயணிகள் பயணம் செய்யும் வசதிக்காக இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

வரும் ஞாயிறு அன்று கேரளத்தில் கோலாகலமாக ஓணம் பண்டிகை, கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வசதிக்காக சென்னையிலிருந்து இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இன்று பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்தின் கொச்சுவேலிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. மறுநாள் காலை 8.30 மணிக்கு இந்த ரெயில் கொச்சுவேலிக்கு  சென்றடையும்.

மேலும், இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருப்பூர், சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கன்னூர், சங்கனாசேரி, திருவல்லா, மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். பின்னர், பயணிகளின் பயணிதிற்காக மேற்கண்ட ரெயில்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது..

அதேபோல, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து மங்களூருக்கு இன்று பிற்பகல் 3.10 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது.  மறுநாள் காலை 8.30 மணிக்கு இந்த ரெயில் மங்களூருக்கு சென்றடையும்.

இந்த ரெயில் பெரம்பூர், காட்பாடி, சேலம், அரக்கோணம், ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, சொரனூர், திரூர்,  கண்ணூர், வடகரா, தலசேரி, பையனூர், நீலேஸ்வரம், காசர்கோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special trains running on the occasion of Onam


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->