'ஜெம்' வீரமணி போக்சோ வழக்கு; ஐபிஎஸ் அதிகாரி அருணிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை..! - Seithipunal
Seithipunal


'ஜெம்' கிரானைட் வீரமணி, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு உடைந்தையாக இருந்த 04 பேர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் புகார் எழுந்தபோதே காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. முன்னதாக இந்த வழக்குத் தொடர்பான புகார் முதலில் எழுந்த போது, சென்னை ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன், விபச்சார தடுப்பு பிரிவின் முன்னாள் உதவி ஆணையரான யாஸ்மின் ஆகியோரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு உத்தரவிட்டிருந்தது.

இவர்களுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் சென்னையின் முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், 'ஜெம்' வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கும் தற்போது பதியப்பட்டுள்ளது. முன்னதாக, 'ஜெம்' வீரமணி மீது ஆறு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மொத்தம் ஏழு போக்சோ வழக்குகள் 'ஜெம்' வீரமணி மீது பதியப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special Investigation Team questions IPS officer Arun regarding the Gem Veeramani POCSO case


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->