திருப்பதியில் பிரமோற்சவ விழா : சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எப்போதிலிருந்து? - Seithipunal
Seithipunal


திருப்பதியில் பிரமோற்சவ விழா : சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எப்போதிலிருந்து?

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலம், மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத தருகின்றனர். 

அந்த வகையில் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று முதல் அக்டோபர் 26-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவம் நடைபெற உள்ளது.

இதனால், பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, கும்பகோணம், காரைக்குடி மற்றும் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கு www.tnstc.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்" என்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special bus for tirupathi Brahmotsavam festival


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->