தென் மாவட்ட மக்களே.!! நாளை ரயில்கள் சேவையில் அதிரடி மாற்றம்.! முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


நெல்லையில் ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பாலங்கள் பராமரிப்பு பணி காரணமாக சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, நெல்லை - திருச்செந்தூர் இடையிலான முன்பதிவில்லா சிறப்பு ரயில் மற்றும் திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி இடையிலான முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோன்று, தாம்பரம் - நாகர்கோவில் இடையிலான அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் இன்று தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாகர்கோவில் - தாம்பரம் இடையிலான அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் நாளை நாகர்கோவிலுக்கு பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பாலக்காடு - திருச்செந்தூர் இடையிலான விரைவு ரயில் நாளை கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், மறு மார்க்கமாக இந்த ரயில் நாளை திருச்செந்தூருக்கு பதில் கோவில்பட்டியிலே இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, நெல்லை - திருச்செந்தூர் இடையிலான முன்பதிவில்லாத சிறப்பு ரயில் நாளை மாலை 4.15 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southern districts trains service changed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->