ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம்... கண்ணீரில் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் நிலையில், தற்போது சுமார் ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்து விட்டதாகவும், இதனால் வரும் வருடத்திற்கான ஆர்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

இந்திய அளவில் பட்டாசு உற்பத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள குட்டி ஜப்பான் சிவகாசியில், நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்த வருடம் ஜனவரி மாதம் பட்டாசுகளுக்கான ஆர்டர் கிடைத்ததும் வேகமாக பணிகளை தொடங்கிய நிலையில், மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 50 விழுக்காடு பணியாளர்களுடன் உற்பத்தியை தொடங்கலாம் என அரசு அறிவித்தாலும், போக்குவரத்து காரணமாக மூலப்பொருட்களைக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. 

இதையடுத்து, அடுத்தடுத்து வந்த பண்டிகைகளுக்கும் பட்டாசு விற்பனை சரிவர நடக்காமல் போகவே, தீபாவளியும் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. இதனால் 1000 கோடி அளவிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ள நிலையில், வரும் வருடத்திற்கான ஆர்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivakasi Firework Owners sad to Fireworks stagnation due to Corona


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->