நில அபகரிப்பு விவகாரமா?. கூலிப்படை சம்பவமா?.. சிவகங்கையில் மாணவர் கொலை வழக்கில் மர்மம்.!! - Seithipunal
Seithipunal


மருத்துவக்கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வேறு சம்பவம் செய்ய வந்த கூலிப்படை செய்ததா?. அல்லது நில அபகரிப்பு விவகாரத்தில் கொலை திட்டமிட்டு நடந்ததா? என காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியை சார்ந்தவர் இருதய ராஜ். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவரது மகன்கள் ஜோசப் சேவியர் (வயது 25), கிறிஸ்டோபர் (வயது 22). இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வந்துள்ளனர். தற்போது, கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்த நிலையில், இவர்களுக்கு சொந்தமாக உள்ள 20 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்யாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் அந்த நிலம் உபயோகம் இல்லாத நிலமாக இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இவர்களின் விவசாய நிலத்தில் சிலர் மதுபானம் வருந்துவதாக தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு இருதய ராஜ் மற்றும் அவரது மகன்கள் ஜோசப், கிறிஸ்டோபர் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு மதுபானம் அருந்திக்கொண்டு இருந்த சிலர் தோட்டத்தில் உள்ள வீட்டினை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மூன்று பேரும் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட தகராறில் கிறிஸ்டோபர் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் சிவகங்கை நகர் காவல் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில், இருதயராஜுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலையத்தில் பழைய வீடு ஒன்றும் இருக்கும் நிலையில், அங்கு யாரும் செல்வதில்லை. இதனையடுத்து, பாழடைந்த வீட்டினை சமூக விரோத செயலுக்கு சமூக விரோதிகள் உபயோகம் செய்துள்ளனர். மேலும், விரும்பத்தகாத செயலும் நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கும்பல் மதுபானம் அருந்திய நிலையில், ஆடு மேய்ப்பவர் இருதயராஜுக்கு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, இருதய ராஜ், ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் ஆகியோர் நிலத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு, மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தவர்களை அங்கிருந்து செல்ல கூறி எச்சரிக்கவே, இதனை கிறிஸ்டோபர் செல்போனில் விடியோவாக பதிவு செய்துகொண்டு இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை நடந்துள்ளது. மேலும், ஜோசப் மற்றும் இதய ராஜுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், கிறிஸ்டோபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய காவல் துறையினர், இருதய ராஜ் மற்றும் ஜோசப்பை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து கொலையாளிகள் தொடர்பாக விசாரணை செய்து, வாணியங்குடி பகுதியை சார்ந்த மருத்துராஜ் மற்றும் நேரு பஜார் பகுதியை சார்ந்த நந்தகுமார் ஆகியோரை சந்தேகத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் 10 க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் சந்தேகிக்கும் நிலையில், உள்ளூர் ஆட்கள் மதுபானம் அருந்த சென்றால் லுங்கி, சட்டை போன்றவற்றை அணிந்து சாதரணமாக செல்வார்கள். ஆனால், அங்கு இருந்த கும்பல் பேண்ட், சட்டை அணிந்து ஆயுதத்தையும் வைத்துள்ளது விசாரணையில் அம்பலமானது. இதனால் அங்கு இருந்தது வேறு சம்பவத்திற்கு வந்த கூலிப்படையா?. செல்போனில் வீடியோ பதிவாகி வெளியானால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கொலை நடந்ததா?. இல்லை நில அபகரிப்பு முயற்சியில் நடந்த சம்பவமா? என விசாரணை நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Medical Student Christopher Murder Case Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->