செல்போன் வாங்கிய கடனை அடைக்க சாலையோரம் நாவற்பழம் விற்கும் மாணவி அஞ்சுகா..! - Seithipunal
Seithipunal


இணையவழி கல்விக்கு செல்போன் வாங்கிய பணத்திற்கு வட்டி செலுத்த, பனிரெண்டாம் வகுப்பு மாணவி நாவற்பழம் விற்பனை செய்து வருகிறார். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நைனாபட்டி பகுதியை சார்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி ராதா. இந்த தம்பதிகள் இருவருக்கும் அஞ்சுகா என்ற மகள் இருக்கிறார். அஞ்சுகா அங்குள்ள கானாடுகாத்தான் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

அஞ்சுகாவின் தந்தை மாணிக்கம் கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துவிட, அவர்களின் குடும்பம் பெரும் வறுமைக்கு உள்ளாகியுள்ளது. தாயார் ராதா மற்றும் சகோதரர் மணிராஜாவின் கூலிவேலை வருமானத்தில் வாழ்க்கை நகர்ந்துள்ளது. 

வறுமையில் குடும்பம் தவித்தாலும் தனது மகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணி சிரமப்பட்டு படிக்க வைத்த நிலையில், ஊரடங்கால் இணையவழியில் பாடம் பயிற்றுவிக்கப்பட்ட வருகிறது. தொடக்கத்தில் செல்போன் இல்லாமல் இணையவழி கல்வியை பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், ரூ.7 ஆயிரம் செலவில் பழைய செல்போனை தாயார் ராதா மகளுக்கு வாங்கி கொடுத்துள்ளார். 

அன்றாட கூலி வேலைக்கு சென்று தவிக்கும் தனது தாய், செல்போனை வாங்கி வட்டிக்காட்ட இயலாமல் தவிப்பதை பார்த்த அஞ்சுகா, தன்னாலான உதவியை செய்ய முடிவெடுத்து அப்பகுதியில் உள்ள நாவற்பழ மரங்களில் உள்ள நாவற்பழங்களை பறித்து விற்பனை செய்து வருகிறார். மேலும், திருச்சி நெடுஞ்சாலையில் இணையவழி வகுப்புகளை கவனித்தபடியே நாவற்பழத்தை விற்பனை செய்து வருகிறார்.

இந்த விஷயம் குறித்து மாணவி அஞ்சுகா தெரிவிக்கையில், " இணையவழிக்கல்விக்கு செல்போன் வேண்டும் என அம்மாவிடம் கூறிய நேரத்தில், முதலில் பணம் இல்லை என வருத்தப்பட்டார். பின்னர், கடனுக்கு செல்போன் வாங்கிக்கொடுக்க வற்புறுத்தி, கடனை நான் அடைகிறேன் என்று கூறி செல்போன் வாங்கினேன். தற்போது நாவற்பழம் விற்பனை செய்து பாதி கடனை அடைந்துள்ளேன். 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு நர்சிங் படிக்க முடிவு செய்துள்ளேன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Girl Student Anjuka sales Naval Fruit to Seattle Loan Amount Buying Mobile Listen Online Class


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal