நெல்லை விடுதியில் அதிர்ச்சி ரெய்டு...! அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த இளம்பெண்கள் மீட்பு...! இடைத்தரகர் சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் இடைத்தரகரை காவலர்கள் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த 2 இளம்பெண்களை மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாகப் பணகுடி காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்ற காவலர்கள், அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, கேரள மாநிலம் மற்றும் கரூர் பகுதியைச் சேர்ந்த 2 இளம்பெண்கள் விடுதி அறையில் அடைத்து வைக்கப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

காவலர்கள் சோதனை நடத்துவதை அறிந்த அங்கிருந்த 2 வாலிபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பியோடினர்.இதனைத் தொடர்ந்து, அறையில் இருந்த 2 இளம்பெண்களையும் காவலர்கள் மீட்டு, அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, இளம்பெண்களை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகப் பணகுடி அண்ணாநகரைச் சேர்ந்த விவேக் ஆனந்த் (44) என்பவரைக் காவலர்கள் கைது செய்தனர்.

மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய 2 வாலிபர்களையும் பிடிப்பதற்குக் காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock raid at Nellai hostel Young girls locked room rescued How middleman caught


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->