மீண்டும் தொடங்கியது உலகின் பழமையான மலை ரயில் சேவை...!! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!! - Seithipunal
Seithipunal


மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மிகவும் பழமையான மலை ரயில்  உதகை மற்றும் மேட்டுபாளையம் இடையிலான மலை ரயில் ஆகும்.  இந்த ரயிலில் பயணிப்பதற்காகவே வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகைபுரிகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் மலை ரயில் பாதையில் இரு இடங்களில் மண்சரி ஏற்பட்டது. இதனால் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படிருந்தது.

இதனை அடுத்து,  மண்சரிவுகளை அகற்றி இருப்பு பாதைகளை சீரமைக்கும்  பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இந்த பணி தற்போது நிறைவடைந்த  நிலையில் இன்று காலை முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். உதகை மற்றும் மேட்டுபாளையம் இடையிலான மலை ரயில் பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Service resumed at Ooty Hill Train


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->