பரபரப்பு பேட்டி! வாக்குமூலம் கொடுத்த அஜித் குமாரின் நண்பர் சதீஷ்வரன்...!
Sensational interview Ajith Kumars friend Satishwaran gives a statement
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை காவலர்கள் தாக்கியதை வீடியோ எடுத்த அவரது நண்பர் சத்தீஸ்வரன் நிருபர்களுக்கு சந்திப்பில் தெரிவித்ததாவது,"அஜித்குமார் கஸ்டடி மரணத்தில் சாட்சிகளாக உள்ள அனைவரும் அச்சத்தில் உள்ளனர். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நடந்தது என்ன என்பதை நீதிமன்றத்தில் கண்டிப்பாக தெரிவிப்பேன். நான் தான் அஜித்குமாரை அடித்தேன் என்று என் மீதே பொய் புகார் தெரிவித்தனர்.
நீதி வழங்கக்கூடிய தெய்வமாக பார்க்கப்படும் மடப்புரம் காளியம்மன் கோவில் முன்பு இப்படி அநீதியாக நடந்ததை இப்போது வரை என்னால் ஏற்கமுடியவில்லை.
எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது. அஜித் குமாரை காப்பாற்ற முடியவில்லையே என்ற மன கஷ்டம் ரொம்பவே இருக்கு. எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதியே தெரிவித்துள்ளார்.
ஆனால் புகார் கொடுத்தும் இன்னும் பாதுகாப்பு கொடுக்கவில்லை. கொலை மிரட்டல் வருகிறது. வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. எனக்கு என்ன ஆனாலும் பிரச்சனை இல்ல, பல சாட்சிகள் பயந்தபடி இருக்காங்க அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Sensational interview Ajith Kumars friend Satishwaran gives a statement