சீமானுடன் பிரபல நடிகை செல்பி..! தீயாக பரவி வரும் போட்டோ.!  - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் நடிகை கஸ்தூரி எடுத்த செல்பியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகின்றார். கடந்த மக்களவைத் தேர்தலில், அனைத்து தொகுதியிலும் தனது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி இருந்தார். என்னதான் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டாலும் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை அவர்களால் பெற முடியவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில், அவர் தன்னுடைய 53 வது பிறந்தநாள் விழாவை இன்று கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. இந்த நிலையில் தன்னுடைய நீண்டகால நண்பரான சீமானுக்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தான் சீமானுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, அதில்," 25 ஆண்டுக்கால நட்பே, நூறாண்டு வாழி. பெருமதிப்பிற்கு உரிய சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்."என்று தெரிவித்துள்ளார். கஸ்தூரி அமைதிப்படை படத்தில் நாயகியாக நடித்த பொழுது அந்த படத்திற்கு சீமான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman selfie with kasturi


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal