நம் நாட்டை பிச்சைக்காரன் நாடாக மோடி மாற்றியுள்ளார் - சீமான் ஆவேசம்.!
seeman election campaighn in erode
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எதிரி கிடையாது சுற்றிலும் எதிரிகள் உள்ளது. காங்கிரஸ், திமுக பாஜக அதிமுக ஆகிய நான்கு கட்சிகள் கோட்பாடும் தமிழ் சமூகத்திற்கு எதிரானது. இதனை கவனத்தில் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
எதிலும் கலப்படத்தை விரும்பவில்லை மக்கள் ஆனால் உயிருக்கு நிகரான மொழியில் பிற மொழியை கலந்து கலந்து பேசுகிறார்கள். உலகத்தில் எந்த மொழியும் பிற மொழி துணையின்றி வாழும் மொழி தமிழ் மொழி. 5 ஆண்டு போதும் பூமியின் சொர்க்கமாகத் தமிழகத்தினை மாற்றுவோம்.
10 ஆண்டுகள் ஆண்டும் நாட்டை பிச்சைக்காரன் நாடாக மட்டுமே மோடி மாற்றியுள்ளார். மக்கள் மத்தியில் இவ்வுள்ள திட்டம் கொண்டு வந்தேன் என்று மோடி செய்தியாளரைச் சந்திப்பாரா? ஜாதி மதம் கடவுள் பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களைப்பற்றி சிந்திப்பவன் ஜாதி மதத்தை சிந்திக்க நேரம் இருக்காது.
இன்னொரு முறை பாஜக கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்திய நாட்டை மறந்து விட வேண்டும். 90 சதவீதம் நாடு ஏற்கனவே விற்கப்பட்டது. அப்போது அதானி அம்பானி ஆகிய இருவரிடமும் தான் நாடு இருக்கும்” என்று பேசியுள்ளார்.
English Summary
seeman election campaighn in erode