அஜித்குமார் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சீமான்: சி.பி.ஐ., எதற்காக..? போலீஸ் மீது நம்பிக்கை இல்லையா..? என கேள்வி..! - Seithipunal
Seithipunal


போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 

அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ., எதற்காக மாற்ற வேண்டும். தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லையா..? என  சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தாக பலர் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

நிகிதா மோசடி செய்து வாங்கிய பணத்தில், அவர்களுக்கும் பங்கு கொடுத்திருப்பாரோ என்று சந்தேகம் வருகிறது என்றும், இப்போது வரை விசாரிக்காதது ஏன்? உண்மையில், கோவிலுக்கு அவர் நகையை கொண்டு வந்தாரா..? அவர் யாரிடம் பேசினார். என்பதையும் விசாரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேல் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவில் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் செயல்பட்டதாக அவர்களின் மனைவிகள் தெரிவித்தனர். அந்த உத்தரவு பிறப்பித்த மேல் அதிகாரி யார். இதுகுறித்து எந்த விசாரணையும் இல்லை. எந்த நடவடிக்கையும் இல்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர்கள் சீருடையில் இல்லாமல், போலீஸ் ஸ்டேசன் அழைத்து வராமல், கோவில் பின்புறம் வைத்து மனித உரிமையை மீறி விசாரிக்க உத்தரவிட்டது யார்? என்றும் வினவியுள்ளார்.

அத்துடன், நாங்கள் போராட அனுமதி கேட்டால், நெறிமுறைகள் பேசும் போலீசார் அதனை கடைபிடித்து இருந்தால் அஜித்குமார் இறந்திருக்க மாட்டார் என்றும், எஸ்.பி.,யை தாண்டி சிறப்பு காவல்படைக்கு உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்? என்று நிருபர்களிடம் சீமான் பேசியுள்ளார்.

சி.பி.ஐ., விசரணையை முதல்வர் கேட்கிறார். காவல்துறை யார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது..?. யாரின் துறை..?. யாரின் இலாகா..?. முதல்வரின் கீழ் செயல்படுகிறது. உங்கள் போலீசார் மீது நம்பிக்கை இல்லையா...? எதற்கு சி.பி.ஐ., விசாரணை கேட்கிறீர்கள்..?. மாநில சுயாட்சி, மாநில உரிமை பேசுகிறீர்கள். உங்கள் போலீஸ் மீது நம்பிக்கை இல்லையா..?சரியாக விசாரிக்கவில்லையா..? உங்கள் உளவுத்துறை சரியாக இயங்கவில்லையா..?. என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் அத்தொடர்ந்து அவர் அங்கு பேசுகையில், குற்றம் வெளிப்படையாக தெரிகிறது என்றும், எப்படி நடந்தது தெரியாமல் இருக்கும் போது தான் விசாரணை. உத்தரவு பிறப்பித்தவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?. என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்த ஏமாற்றுகின்றீர்கள் என்றும், எங்களை ஏமாற்றுவதற்கு தான் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்படுகிறது. சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு எத்தனை வழக்குகளில் நீதி வழங்கப்பட்டு உள்ளது? என்று தெரிவித்துள்ள சீமான், நான் கேட்கும் கேள்விகளை எதிர்க்கட்சிகள் கேட்கிறதா..? தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்..? கொடநாட்டில் இறந்தவர் யார்என தெரிகிறது. கொன்றது யார்..? என்றும் கேட்டுள்ளார்.

அத்துடன், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கும் அரசு, போலீசாரால் அடித்து கொல்லப்பட்டால் ரூ.5 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டது ஏன்..? என சரமாரியாக தாக்கி பேசியுள்ளார். மேலும், சி.பி.ஐ., விசாரணை எல்லாம் மாநில உரிமையில் வருகிறதா..? அடித்துக் கொன்ற போலீசாருக்கு நீதியை நிலைநாட்ட தெரியாதா..? உண்மை குற்றவாளியை மறைக்கவே நடவடிக்கை எடுக்கின்றீர்கள். அஜித்குமாரை அடிக்க சொன்ன அதிகாரி யார்..?அஜித்குமாரை அடித்து கொல்லும் அளவுக்கு நெருக்கடி கொடுத்த உயர் அதிகாரி யார்..? என்று நிருபர்களிடம்  சீமான் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman asks why CBI has no faith in police in Ajith Kumar case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->