முதுமை யானைகளின் வலிக்கு ரகசிய சிகிச்சை...! – வனத்துறையின் புதிய முயற்சி...!
Secret treatment pain old elephants New initiative by Forest Department
மனிதர்களுக்கு நெருக்கமான உயிரினமாகக் கருதப்படும் யானைகள், முதுமை காலத்தில் வியாதிகள் மற்றும் அதிக பராமரிப்பு செலவால் அவதிப்படுகின்றன.

இதனால் உரிமையாளர்கள், பாகன்கள் பலமுறை அவற்றை கைவிட நேரிடுகிறது.இதை சமாளிக்க, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எம்.ஆர். பாளையம் பகுதியில் வனத்துறை யானைகள் மறுவாழ்வு மையம் அமைத்துள்ளது.
இங்கு கைவிடப்பட்ட 9 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும்,71 வயது கோமதி, 60 வயது சுமதி, 64 வயது சுந்தரி, 66 வயது இந்திரா போன்ற வயதான யானைகள் கால்வலியால் அவதிப்படுகின்றன.
அவற்றின் வலியை குறைக்க ‘ஹைட்ரோதெரபி’ (நீர் சிகிச்சை) குளம் அமைக்கப்பட்டு, தினமும் ஒரு மணி நேரம் நீராட வைக்கப்படுகிறது.இதில் சில யானைகள் 2 நாளுக்கு ஒருமுறை நீராடுகின்றன.
இந்த சிகிச்சையால் யானைகளின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Secret treatment pain old elephants New initiative by Forest Department