குறட்டை பிரச்சனையா? வெறும் '5' டிப்ஸ் பாலோ பண்ணா போதும்! குறட்டை பிரச்சனைக்கு இதோட எண்ட்கார்டு!!
Snoring problem Just follow these 5 tips This is the endgame for snoring
குறட்டை சாதாரணமாக தோன்றினாலும், அருகில் தூங்குவோரின் நிம்மதியைப் பெரிய அளவில் கெடுக்கும். தூக்கத்தின் போது சுவாசக் குழாய் சுருங்குவதால் ஏற்படும் குறட்டை, காலத்திற்கு காலம் உடல் நலத்துக்கும் பாதிப்பு விளைவிக்கக்கூடும். ஆனால் சில எளிய வாழ்க்கை முறைக் பழக்கங்களை பின்பற்றினால், இந்தப் பிரச்சனையை நிரந்தரமாக குறைக்க முடியும்.
1. பக்கமாக சாய்ந்து தூங்குங்கள்
மல்லாந்து (back) படுக்கும் போது சுவாசக் குழாய் சுருங்கி குறட்டை அதிகரிக்கிறது. அதற்கு பதில் பக்கமாக படுக்கும் பழக்கத்தை வளர்த்தால் காற்றோட்டம் மேம்பட்டு குறட்டை குறையும்.
2. உடல் எடையை குறையுங்கள்
அதிக எடை, குறிப்பாக கழுத்தைச் சுற்றிய கொழுப்பு, சுவாசக் குழாயை குறுக்கி குறட்டை ஏற்படுத்துகிறது. 5–10% உடல் எடை கூட குறைந்தால் கணிசமான மாற்றம் தெரியும்.
3. மது & புகையைத் தவிர்க்கவும்
மது அருந்துதல், புகைவிடுதல் ஆகியவை தொண்டை தசைகளை தளரச்செய்து காற்றோட்டத்தைத் தடுக்கிறது. தூங்கும் நேரத்துக்கு 3–4 மணி நேரத்திற்கு முன்பு இதைத் தவிர்ப்பது நல்லது.
4. மூக்கடைப்பு இருந்தால் சிகிச்சை பெறுங்கள்
சளி, சைனஸ், அலர்ஜி ஆகியவை மூக்கடைப்பை ஏற்படுத்தி வாயால் சுவாசிக்க வைக்கிறது – இது குறட்டையை அதிகரிக்கும். தூங்குவதற்கு முன் ஆவி பிடித்தல் அல்லது மூக்கு ஸ்ப்ரே பயன்படுத்துதல் உதவும்.
5. தூக்க நேரத்தை சரி செய்யுங்கள்
நேரம் காட்டி தூங்காமல் இருப்பது, தூக்கமின்மை போன்றவை குறட்டைக்குக் காரணம். தினமும் ஒரு நேரத்தில் தூங்கி 7–8 மணிநேரம் உறங்குவது அவசியம்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் குறட்டை பிரச்சனை கணிசமாக குறையும். தொடர்ந்து பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
English Summary
Snoring problem Just follow these 5 tips This is the endgame for snoring