சேர்ந்து வாழ மனைவி மறுப்பு., கத்தியால் குத்திய கணவன்..!! விருதுநகரில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


ஒன்றாக இணைந்து வாழ மறுத்த மனைவியை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜூ. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாண்டீஸ்வரி  என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் கோயம்புத்தூரில் தனி வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டீஸ்வரி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அடுத்து மாமனார் வீட்டிற்கு வந்த ராஜூ மனைவியை சமாதானம் செய்து தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால், பாண்டீஸ்வரி வர மறுக்கவே அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து பாண்டீஸ்வரியும் அவரது தந்தையும் காவல்நிலையம் சென்று விசாரித்த போது அது போன்ற புகார்கள் எதுவும் தரபடவில்லை என கூறப்பட்டது.

அவர்கள் அங்கிருந்து வீடு திரும்பும் வழியில்  நின்றிருந்த ராஜூ மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தான் வைத்திருந்த கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் அளித்த புகாரின் பேரில் ராஜூவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Screaming at the woman who refused to come with her husband


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal