பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...கலெக்டர் உத்தரவு!
Schools are closed today Collectors order
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 26.09.2025 - வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
24-09-2025 நேற்று முன்தினம் காலை வடக்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் - மேற்கு வங்க பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை வலுகுறைந்தது. நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வடமேற்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவியது .
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகம் ,மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது . இது அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி இன்று வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது .
இதனால் இன்று தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யது வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (26.09.2025 - வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Schools are closed today Collectors order