5ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்.. தர்ம அடி கொடுத்த உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கடத்தான் வட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் விஜயன் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த பள்ளியில் 9 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் விஜயன், 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமிக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறுமி, ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர்.

பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்பு தகவல் அறிந்து திருப்பத்தூர் காவல்துறையினர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மாதேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது ஆசிரியர் விஜயன் மீது விசாரணை மேற்கொண்டு துறை சார்ந்த நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று உத்திரவாதம் அளித்ததின் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School teacher sexual Harrasment for 9 year's old girl


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->