பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - தர்மபுரியில் பரபரப்பு.!!
school student vomiting and unconsious for eat food in school
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே கண்சால் பைல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் பள்ளியில் நேற்று மதியம் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் சிலருக்கு அன்று இரவு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக மாணவர்களை பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் மூன்று மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
school student vomiting and unconsious for eat food in school