முதியவரின் உடலை எறும்புகள் கடித்து சேதப்படுத்திய சோகம்.. குளிரூட்டி உட்பட அடிப்படை வசதிகள் கூட இல்லாத சாத்தான்குளம் அரசு மருத்துவமனை.! - Seithipunal
Seithipunal


மருத்துவர்களின் அலட்சியத்தால் முதியவரின் உடல் காலம் தாழ்த்தி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் அழுகிய நிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சோகம் அரங்கேறியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் சொக்கலிங்கம் கிராம பகுதியை சார்ந்த முதியவர் சிவலிங்கம். இவர் விவசாயியாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி ஜூன் மாதம் சிவலிங்கம் தோட்டத்திற்கு சென்ற சமயத்தில் கிணறில் தவறி விழுந்துள்ளார். கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்த முதியவர் சிவலிங்கத்தின் தலை மோட்டாரில் மோதிய நிலையில், மயங்கிய நிலையில் கிணற்று நீருக்குள் விழுந்த முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கிராம மக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் சிவலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சாத்தான்குளம் காவல் துறை அதிகாரிகளும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிவலிங்கத்தின் உடல் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல், குளிரூட்டியிலும் வைக்கப்படாமல் அப்படியே பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடலை கிணற்றில் இருந்து எப்படி மீட்டார்களோ, அதே நிலையில் உடல் 2 நாட்கள் வைக்கப்பட்டுள்ளது. குளிரூட்டி வசதியும் இல்லாததால் முதியவரின் உடலில் எறும்புகள் மொய்த்து, முகமெல்லாம் வீங்கி உடல் பெருத்து காணப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்களிடம் தகவலை தெரியப்படுத்தி பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் வற்புறுத்தவே, அவர்கள் இன்றைய தினத்தில் 2 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. ஒரு நாளுக்கு 2 உடல்கள் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யப்படும். உங்களது தாத்தாவின் உடல் நாளை தான் பிரேத பரிசோதனை செய்யப்படும் என அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.

இதனைக்கேட்ட குடும்பத்தினர் உடலை அலட்சியமாக வைத்துள்ளீர்களா, குளிரூட்டி பெட்டியில் வைத்தாலும் பரவாயில்லை, எறும்புகள் உடலை கடித்து சேதப்படுத்தி உள்ளது, கட்டிடமும் வலுவிழந்த நிலையில் உள்ளது, பிரேத பரிசோதனை செய்யும் அறை போலவா இருக்கிறது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப, மருத்துவர்கள் எந்த விதமான பதிலையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்துள்ளனர். மேலும், சிவலிங்கத்தின் மரணம் கிணற்றில் தவறி விழுந்து ஏற்பட்டுள்ளதால், அது இயற்கை மரணமாகவே கருதப்படும். மாறாக விபத்திலோ அல்லது பிற மரணங்கள் வாயிலாக வரும் உடலுக்கும் இதே நிலைமை நீடித்தால் என்னவாகும்? அங்கு காவலுக்கு ஒரு பணியாளர் கூட இல்லை, நாய்கள் அல்லது எலிகள் போன்றவை உடலை சேதப்படுத்தினால் என்ன செய்வது? என்பதே பலரின் கேள்வியாக அங்கு மருத்துவர்களிடம் எழுப்பப்பட்டது.

எதனையும் மருத்துவர்கள் பொருட்படுத்தாத இக்கட்டான சூழ்நிலையில், மறுநாள் காலையிலாவது பிரேத பரிசோதனை நிறைவு பெற்று உடல் ஒப்படைக்கப்படும் என குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால், காலை 8 மணி முதல் கால்கடுக்க காத்திருந்து மதியம் 2 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை நிறைவு பெற்று அழுகிய நிலையில் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், காலம் கடந்து குளிரூட்டி வசத்தில் இல்லாமல் உடல் கிடப்பில் போடப்பட்டதால், எறும்புகள் முகங்களில் கடித்து முகமே விகாரமாக வீங்கி அடையாளம் தெரியாதது போல உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இறுதியாக வேறு வழியின்றி உடலை கனத்த இதயத்துடன் பெற்றுச்சென்ற குடும்பத்தினர் அப்படியே மயானத்திற்கு சென்று சென்று நல்லடக்கம் செய்துள்ளனர். அவர்கள் நல்லடக்கம் செய்தாலும், முகம் கூட அடையாளம் தெரியாத அளவு அலட்சியத்தால் மாறிப்போனதால் வேதனையுடன் நல்லடக்கம் செய்துள்ளனர். இது போன்ற துயரம் வேறு யாருக்கும், எந்த சூழ்நிலையிலும் ஏற்பட கூடாது, தமிழகத்தின் ஒவ்வொரு மருத்துவமனையிலும் குளிரூட்டி வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று சிவலிங்கத்தின் பேரன் ஆதங்கம் தெரிவிக்கிறார். 

இது தொடர்பாக சிவலிங்கத்தின் பேரன் பிரவீன் தெரிவிக்கையில், " எனது தாத்தாவின் முகம் கூட அடையாளம் தெரியாத அளவு இரண்டு நாட்கள் பிரேத பரிசோதனை கிடப்பில் போடப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் உடலை பாதுகாக்க ஒரு குளிரூட்டி பெட்டகம் கூட இல்லை. ஒரு நாளை எதோ ஓர் சூழ்நிலையில் 4 முதல் 5 மரணங்கள் ஏற்பட்டால், அந்த குடும்பத்தினரின் நிலைமை என்னாவது?. தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனையிலும் இந்த துயரம் நடக்கிறது. இதனை அரசு கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். எந்த மருத்துவமனையிலும் இனி இதுபோன்ற அலட்சியம் மற்றும் துயரம் நடக்க கூடாது. தமிழகத்தின் ஒவ்வொரு மருத்துவமனையிலும் அரசு சார்பாக குளிரூட்டி பெட்டகங்கள் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் " என்று கண்ணீருடன் தெரிவிக்கிறார். 

பிரவீன் திரைத்துறையில் சண்டைக்காட்சிகளில் நடிக்கும் துணிசெயல் மாற்று நடிகராக (ஸ்டண்ட் மேனாக) சென்னையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசை பொறுத்த வரையில் கொரோனா 3 ஆவது அலைக்கு தயாராகிவிட்டோம், மருத்துவமனைகளில் தரங்கள் உயர்த்தப்பட்டுள்ளது என பல அடுக்கடுக்கான பேட்டிகள் மற்றும் விளம்பரங்கள் செய்து வரும் நிலையில், ஒரு மருத்துவமனையில் குளிரூட்டி பெட்டக வசதிகள் கூட இல்லாமல் வைத்திருப்பது எப்படிப்பட்டது? என்பது தான் கேள்வியே. இதனை கேட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்கள் தான் ஆகிறது என்று பதில் மட்டுமே ஆட்சியாளர்களிடம் இருந்து வரும். ஆட்சியர்கள் முந்தைய அரசுகளை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, இதுபோன்ற மற்றொரு துயரம் ஏற்படாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sathankulam Govt Hospital Doctors ir Responsible Post Modem Died Man Body Decomposed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->