2000 ரூபாய் நோட்டு விவகாரம் | மத்திய அரசுக்கு சசிகலா பரபரப்பு கோரிக்கை! - Seithipunal
Seithipunal



ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்று, வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நிர்ணயம் செய்துள்ளதும் மக்களுக்கு பயனளிக்கக்கூடியது. 

ஆனால் அதேசமயம் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை, எவ்வாறு திரும்ப பெறுவது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ள போதும், வங்கி அல்லாத மற்ற இடங்களில் குறிப்பாக டாஸ்மாக், கோ ஆபரேட்டிவ் வங்கிகள், முத்திரை தாள் விற்பனை போன்றவற்றில் எந்த அளவுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை ஒரு நபரிடமிருந்து பெற முடியும் என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை.

இதுபோன்ற இடங்களில் எல்லாம் அதிகாரவர்க்கத்தினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதில் சரியான நெறிமுறைகளை வகுக்க வில்லை என்றால் மத்திய அரசின் நோக்கமும் நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகிவிடும். 

எனவே, முறைகேடுகளை முற்றிலும் தடுக்கும் வகையில், வங்கி அல்லாத பிற இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்" என மத்திய அரசை சசிகலா வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SASIKALA SAY ABOUT RBI 2000 RUPEE ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->