மீண்டும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்:கைது செய்த போலீசார்!
Sanitation workers protest again Police make arrests
தூய்மை பணியாளர்கள் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தினர், தலைமைச்செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதேபோல பல்வேறு மாவட்டங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.இந்தநிலையில் அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இன்று திடீரென சென்னை தலைமைச் செயலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
, சட்டசபை கூட்டம் நடந்துவரும் நிலையில் அவர்கள் போர் நினைவுச் சின்னம் முதலே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதையும் தாண்டி எப்படியோ தலைமைச் செயலகம் முன்பு வந்து முற்றுகை போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், தூய்மைப் பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்ததால், தலைமைச் செயலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது. தூய்மைப் பணியாளர்களில் சிலர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்று சமுதாயக் கூடத்தில் தங்கவைத்தனர்.
English Summary
Sanitation workers protest again Police make arrests