உடுமலை அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான சந்தன கட்டைகள் பறிமுதல் - கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் மூன்று பேரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகம் அரளிப்பாறை பகுதியில் மூன்று நபர்கள் பைகளுடன் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் உள்ள பகுதியில் 3 நபர்களின் நடமாடத்தை பார்த்த வனத்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் வைத்திருந்த பைய்களில் சோதனை செய்ததில் சந்தன கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கேரளா மாநிலம் வண்டலூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி(37), பால்ராஜ் (43), சக்திவேல்(38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்களிடமிருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 13 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த வனத்துறையினர், சந்தன கட்டைகளை எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sandalwood worth Rs 5 lakh seized near Udumalai


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->