காதல் திருமணம்.. ஒரு வருடத்தில் வரதட்சணை கொடுமை செய்த காதல் கணவன்.. பச்சிளம் குழந்தையுடன் தாய் தர்ணா.! - Seithipunal
Seithipunal


காதல் கணவன் திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள், தனது குடும்பத்துடன் சேர்ந்து காதல் மனைவிக்கு வரதட்சணை தொல்லை கொடுத்து தெருவில் விரட்டியடித்த சோகம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை பகுதியை சார்ந்தவர் நந்தினி. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியை சார்ந்தவன் ரவிக்குமார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் 25 ஆம் தேதி திருமணம் செய்துள்ளனர். 

திருமணத்தின் போது எவ்வித வரதட்சணையும் வேண்டாம் என்று பேசிய காவிய காதலன், திருமணம் ஆன சில மாதங்களிலேயே மனைவியிடம் உனது பெற்றோரிடம் சென்று 30 சவரன் நகை வாங்கி வா என கொடுமைப்படுத்தி இருக்கிறான். மேலும், அவனது குடும்பமும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் நந்தினி புகார் அளித்திருந்த நிலையில், அதனால் எந்த பயனும் இல்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்த சூழ்நிலையில், நந்தினிக்கு கடந்த 7 ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நந்தினி, கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் மெது நடவடிக்கை எடுக்க மனு அளித்தார். 

மேலும், தான் கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனுடன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடவே, பணியில் இருந்த அதிகாரிகள் அவரை சேலம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Woman Nandhini Love Married Dowry Torture by Love Marriage Husband Ravikumar and His Family


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal